புத்த விக்கி
Advertisement
வருக புத்த விக்கிக்கு
கட்டற்ற பௌத்தக்களஞ்சியம்
45 கட்டுரைகள் உள்ளன
  • புத்தர்கள்
  • போதிசத்துவர்கள்
  • யிதம்
  • தத்துவங்கள்
  • மந்திரங்கள்
  • சூத்திரங்கள்
  • தேவதாமூர்த்திகள்
  • பிரிவுகள்
  • அண்டவியல்


அறியாத செய்தி

left|100px|திரைலோக்ய விஜயனாக சிவனை அடக்கும் வஜ்ரபானி புத்தர் எவ்வாறு காலப்போக்கில் திருமாலின் அவதாரமாக இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாரோ அதேபோல பௌத்த மதத்திலும் சிவன் முதலிய தேவர்களும் வருங்கால புத்தர்களாகவும் பௌத்த தர்மத்தின் காவலர்களாகவும் கருதப்படுகின்றனர். முன்னது பரவலாக அறியப்படுவது போல பின்னது அவ்வளவாக அறியப்படவில்லை. குறிப்பாக சிவன் வருங்கால பஸ்மேஸ்வர புத்தர் என பௌத்தர்களாக கருதப்படுகிறார். சிவன் பஸ்மேஸ்வர புத்தர் ஆகப்போவதை உணர்வதை குறித்து பல கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் வஜ்ரபானி சிவனை அடக்கும் கதை.

இந்த கதை சர்வ ததாகத தத்துவம் சங்கிரஹம் என்னும் நூலில் சிவனை அடக்கிய வஜ்ரபானி குறித்த கதை விபரமாக கூறப்பட்டுள்ளது. இதில் புத்த தர்மத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிவன் மீது வஜ்ரபானி திரைலோக்யவிஜய உருவத்தை எய்து தனது கால்களை அவர் மீது வைத்து அவரையும் உமாதேவியையும் அடக்குகிறார். வஜ்ரபானி கால்கள் பட்டதும் இருவரும் தாம் வருங்கால புத்தர்கள் என்பதை உணர்ந்து புத்த தர்மத்தை ஏற்றுக்கொள்வதாக இக்கதை அமைந்துள்ளது

மேலும் அறிந்துகொள்ள: சிவனை அடக்கிய வஜ்ரபானி

இன்றைய புத்தர்

தாரா தேவியின் சிலை

தாரா அல்லது ஆர்ய தாரா வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவர்.இவர் சில சமயம பெண் புத்தராகவும் கருதப்படுகிறார். தாரா திபெத்திய தந்திர பௌத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் நமது நற்செயல்பாடுகளின் வெற்றியினால் கிடைக்கும் நன்மையின் அதிபதியாக கருதப்படுகிறார். ஒரு தந்திர தேவதையாக தாரா வஜ்ரயான பௌத்தத்தின் திபெத்திய பிரிவினரால் வணங்கப்படுகிறார். கருணை மற்றும் சூன்யத்தன்மையில் சில அந்தரங்க மற்றும் ரகசிய குணங்களை புரிந்து கொள்ள திபெத்திய பௌத்தர்கள் தாராவை வணங்குகின்றனர். ஜப்பானின் ஷிங்கோன் பௌத்தத்தில் இவர் தாரானி பொசாட்ஸு(போதிசத்துவர்) என அழைக்கப்படுகிறார்.

உண்மையில் தாரா தேவி என்பது பொதுவியல்புகளை உடைய பல போதிசத்துவர்களின் ஒரு பொதுப்பெயரே ஆகும். பௌத்தத்தில் போதிசத்துவர்கள் பல்வேறு நற்குணங்களின் உருவகங்களாகவே கருத்தப்பட்டுவருகின்றனர். அந்த வகையில், ஒரே குணத்தில் பல்வேறு இயல்புகளை இந்த பல்வேறு தாராக்கள் வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்ளலாம்.

இன்றைய பா

புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்

உலக நோன்பி னுயர்ந்தோன் வென்கோ
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்
முற்ற வுணர்ந்த முதல்வா வென்கோ
காமற் கடந்தோய் ஏம மாயோய்
தீநெறிக் கடும்பகை கடுந்தோ யென்கோ
ஆயிர வாரத் தாழியந் திருந்தடி
நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனோ

மணிமேகலை - மணிமேகலா தெய்வம் புத்த பகவானை போற்றியது

இன்றைய மந்திரம்

ஓம் மணி பத்மே ஹூம்(தேவநாகரி: ॐ मणि पद्मे हूँ ), என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து மந்திரம்(ஷடாக்ஷர மந்திரம்) அவலோகிதேஷ்வரருடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி(ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.

இந்த மந்திரம் முதன் முதலின் காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த சூத்திரம் திபெத்திய பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம் ஆகும். இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், "இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன்"

இன்றைய சிறப்புப்படம்

பள்ளிக்கொண்ட புத்தர்


பள்ளிக்கொண்ட புத்தர். பள்ளிக்கொண்ட நிலையில் பல புத்தர் சிலைகள் தாய்லாந்திலும் பர்மாவிலும் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கையயில் தலையை தாங்கிக்கொண்டு சயன கோலத்தில் புத்தர் காட்யளிக்கிறார். பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள புத்தரின் நிலையும் திருமால் பள்ளிக்கொண்டிருக்கும் நிலையும் ஒரே போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement